ஐபில் 2020:7 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்திய ஹைதெராபாத்…

துபாய்,
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், நேற்று நடைபெற்ற 14-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத் சன்ரைசஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
இதனையடுத்து முதலில் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. பிரியம் கார்க் 51 ரன்களும், அபிஷேக் சர்மா 31 ரன்களும், மனிஷ்பாண்டே 29 ரன்களும் வார்னர் 28 ரன்களும் எடுத்தனர். சென்னை அணி தரப்பில் தீபக் சகார் 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.

தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில், முரளி விஜய் நீக்கப்பட்டதால், தொடக்க வீரராக களமிறங்கிய பாப் பிளெஸ்சிஸ் 22 ரன்களில் துரதிஷ்டவசமாக ரன்அவுட் ஆனார்.

அடுத்து வாட்சன் (1), ராயுடு (8), ஜாதவ் (3), ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதன்பிறகு ஜோடி சேர்நத கேப்டன் தோனி ஜடேஜா ஜோடி, அணியை சரிவிலருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் தோனி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், ஜடேஜா அதிரடியாக ஆடி ஐபிஎல் தொடரில் தனது முதல் அரை சதத்தை (50 ரன்கள் 35 பந்து) பதிவு செய்து ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் சென்னை அணிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. அப்துல் சமத் வீசிய இந்த ஓவரில் முதல் பந்து வைடு ஆகி பவுண்டரிக்கு சென்றதால் 5 ரன்கள் கிடைத்தது. அடுத்து வீசப்பட்ட முதல் பந்தில் 2 ரன்களும், 2-வது பந்தில் பவுண்டரியும் அடித்த கேப்டன் தோனி, அடுத்த மூன்று பந்துகளிலும் தலா 1 ரன்கள் எடுக்கப்பட்டது.
இதனால் சென்னை அணியின் தோல்வி உறுதியான நிலையில், கடைசி பந்தில் சாம் கர்ரன் சிக்சர் விளாசினார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கேப்டன் தோனி 47 (36), கர்ரன் 15 (5) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

கடந்த 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்த சென்னை அணி ஹாட்ரிக் தோல்வியை சநித்துள்ள புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.