“ஜவஹர் நவோதயா வித்யாலயா”-பிற்படுத்தப்பட்டோற்கு உருவாக்கப்படும் 99 பள்ளிகள்!!!

இந்தியா முழுவதும் பிற்படுத்தபட்டோர், சிறுபான்மையினர், பின்நோக்கி இருக்கும் பிரிவை சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் வசிக்கும் இடங்களில் 99 ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் கட்டி கொண்டு வருவதாக மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருக்கும் பாக்குா் மாவட்டத்தில் புதியதாக கட்டி கொண்டு வரும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளின் கட்டுமான வேலைகளை காணொலி காட்சி மூலம் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியாலுடன், மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி இணைந்து அடிக்கல் நாட்டினார்.
அப்போது பேசிய மத்திய அமைச்சர்; இந்திய வரலாற்றில் முதல் தடவையாக நாடு முழுவதும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் பின்நோக்கி இருக்கும் பிரிவை சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் வசிக்கும் இடங்களில் 99 ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை மத்திய கல்வி அமைச்சகம் கட்டிக் கொண்டு வருகிறது.
இதற்கு முன்பே கஷ்டப்படும் ஏழை மக்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் பள்ளிகள் உள்ளது. தற்போது 1,173 ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைப்பதற்கு மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் ரூபாய் 36 கோடி அளித்துள்ளது.
இந்த கட்டப்படும் பள்ளிகள் மூலம் கிராமம் புறங்களில் இருக்கும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினரை சேர்ந்த மாணவர்களுக்கு சிறந்த கல்வி கிடைப்பதற்கு முக்கிய பங்காக இருக்கும். பின்நோக்கி இருக்கும் அனைத்து பிரிவினருக்கும் சமயுரிமை வழங்கும் எண்ணத்தில், அவர்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனை ஆகியவற்றறை கட்டுவதற்காக 34 ஆயிரத்துக்கு மேலான உள்கட்டமைப்பு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 2014ம் வருடத்துக்கு முன், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் இருக்கும் 90 மாவட்டத்தை மட்டும் தான் மேம்படுத்த திட்டம் இருந்தது. தற்போது 308 மாவட்டங்களாக அதிகரித்துள்ளது.
இவ்வாறு மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.