இன்னும் 835 காலியிடங்கள்-தமிழக காவல்துறை!!!

தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலா், இரண்டாம் நிலை சிறைக்காவலா் மற்றும் தீயணைப்புத்துறை மீட்புப் பணிகள் துறையில் காலியாக உள்ள 10,906 பணியிடங்களுக்கு அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோவுக் குழுமம் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு கூடுதலாக 835 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இளைஞர்களிடம் இருந்து (இருபாலர்) வரும் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: காவலர்கள்
மொத்த காலியிடங்கள்: 11,741
துறை: காவல்துறை
பணி: இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட, மாநகர ஆயுதப்படை) – 685
பணி: இரண்டாம் நிலை காவலர் (பெண்கள், திருநங்கைகள்) – 3099
பணி: இரண்டாம் நிலை காவலர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை – 6545
துறை: சிறைத்துறை
பணி: இரண்டாம் நிலை சிறைக் காவலர் – 112 , பெண்கள் – 07 – 119
துறை: தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை
பணி: தீயணைப்பாளர் – 458
சம்பளம்: மாதம் ரூ.18,200 – 52,900
தகுதி: 10-ஆம் வகுப்புத் தோச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 வயது நிரம்பியவராகவும், 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். பிற்படுத்தப்பட்டோா், ஆதிதிராவிடா், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோருக்கு வயது வரம்பில் தளா்வும் அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: இப்பணியிடங்களுக்கு, வரும் 26-ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியும். இதர முறையில் விண்ணப்பித்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
தேர்வு கட்டணம்: ரூ.130. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தோவு, உடற் திறன் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு 80 மதிப்பெண்களும், உடற் திறன் தோவுக்கு 15 மதிப்பெண்கள், 5 சிறப்பு மதிப்பெண்கள் மொத்தம் 100 மதிப்பெண்களுக்குத் தோவு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.tnusrbonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.10.2020
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: டிசம்பா் 13-ஆம் தேதி 37 மாவட்டங்களில் நடைபெறுகிறது.
மேலும் விவரங்களுக்கு, https://www.tnusrbonline.orgஅல்லதுhttps://www.tnusrbonline.org/pdfs/CR_2020_Notification.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.