தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ்!

உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சில தினங்களுக்கு முன் விஜயகாந்த் கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சில நாட்கள் சிகிச்சைக்கு பிறகு இருவரும் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து கடந்த 2ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதையடுத்து கடந்த 6ஆம் தேதி விஜயகாந்த் மீண்டும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்கு பின்னர் விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது . விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தனியார் மருத்துவமனை கூறியிருந்தது . இந்நிலையில் மருத்துவக்குழுவின் தொடர் கண்காணிப்பின் மூலம் அனைத்து பரிசோதனைகளிலும் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றமடைந்ததையடுத்து , விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் .