சென்னை மதுப்பிரியர்கள் ‘குஷி’ ஏன் தெரியுமா?

சென்னையில் வரும் 18ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், மதுக்கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. தற்போது சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், வரும் 18-ம் தேதி முதல் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், வரும் 18-ம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும். காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே மதுக்கடைகள் செயல்படும். ஒரு கடையில் நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மது வாங்க வருவோர் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பால், சென்னையில் உள்ள மதுப்பிரியர்கள் ‘குஷி’யில் உள்ளனர்.