தர்மபுரியில் வேலைவைப்புக்கான உதவித்தொகைக்காக புதிதாக விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில், இதுவரை வேலைவாய்ப்பு உதவித்தொகை பெற விண்ணப்பம் செய்யாத புதியவர்கள், உடனடியாக விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

படித்து வேலைவாய்ப்பு அற்றோர்களுக்கு, உதவித்தொகை வழங்கும் திட்டத்தை, அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி, 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு, 200 ரூபாய், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 300 ரூபாய், பிளஸ் 2 படித்தவர்களுக்கு, 400 ரூபாய், பட்டதாரிகளுக்கு, 600 ரூபாய் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு, 10ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு, 600 ரூபாய், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 750 ரூபாய், பட்டதாரிகளுக்கு, 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில், 2020 அக்., 30 அன்று முடிவடையும் காலாண்டிற்கு, தகுதியுடைய படித்த, வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற, விண்ணப்பங்கள் கொரோனா தடுப்பு காரணமாக, வேலைவாய்ப்பு அலுவலக இணையதளமான, http//tnvelaivaaippu.gov.in ல், பதிவேற்றம் செய்து கொள்ளலாம். மேலும், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற, முதன்முறையாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடையவர்கள், விண்ணப்பங்களை தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வந்து, பெற்று விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x