பள்ளிகள் திறந்த சில நாட்களிலேயே 34 மாணவர்களுக்கு கொரோணா!!!

மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், வகுப்புக்கு சென்ற 34 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் மீண்டும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் சந்தேகம் கேட்க பள்ளிக்கு வரலாம் என மத்திய அரசு கூறியது.

அதுவும் மாணவர்கள் பெற்றோரின் அனுமதியுடன் பள்ளிக்கு வர வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியது. அதனால் நாடு முழுவதும் மாணவர்கள் பள்ளிக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

அக்டோபர் 15 முதல் வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

ஆனால் இது ஆபத்தை விளைவிக்கும் என கல்வியாளர்கள் எச்சரித்தனர்.

கர்நாடகாவில் ‘வித்யகமா’ என்ற திட்டத்தின்கீழ் கிராமப்புறங்களுக்குச் சென்று கல்வி கற்றுத் தரப்படுகிறது. அங்கு கல்வி பயின்ற 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே கர்நாடகாவில் பள்ளிகளுக்கு மூன்று வாரங்கள் விடுப்பு அளித்து அம்மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். அதனால் நாடு முழுவதும் மாணவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x