“பெண்களை வன்புணர்வு செய்பவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்!” விஜயகாந்த் கருத்து!!

பாலியல் குற்றங்களைத் தடுக்க மரணதண்டனை ஒன்றே தீர்வு என கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் ஹாத்ராஸ் என்ற கிராமத்தில் உள்ள இளம் பெண்ணுக்கு நடந்த கூட்டு பாலியல் பலாத்காரத்தால் இந்தியாவே அதிர்ச்சியில் இருந்தது.
இந்த நிலையில், “பாலியல் குற்றங்களைத் தடுக்க மரணதண்டனை ஒன்றே தீர்வு. மேலும் பட்டியலின பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அடக்க கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என்று தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் கூறியுள்ளார்.
கேப்டன் விஜயகாந்தின் இந்த கருத்து தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.