இன்று பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பின் மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல்!!!

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என, மொத்தம், 206 பள்ளிகளை சேர்ந்த, 19 ஆயிரத்து, 566 மாணவ, மாணவியர், இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு எழுதினர். இவர்களில், 18 ஆயிரத்து, 796 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, தேர்வு முடிவு வெளியான சில நாட்களிலேயே, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த மதிப்பெண் பட்டியல், மூன்று மாதங்களுக்கு மட்டுமே செல்லத்தக்கவை. இந்நிலையில் இன்று முதல், அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் 2 மாணவ, மாணவியர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதையொட்டி, நேற்று நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கல்வி அலுவலகம் மூலம், தலைமையாசிரியர்களிடம் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில், முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் கபீர் ஆகியோர் மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கினர். அதேபோல் திருச்செங்கோடு கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடம், கல்வி அலுவலர் ரவி மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கினார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x