ம.பி.,யில் கள்ளச்சாராயம் அருந்திய 14 பேர் பலி: 10 பேர் கைது; 4 போலீசார் சஸ்பெண்ட்!!

ம.பி.,யில் கள்ளச்சாராயம் அருந்திய 14 பேர் பலியானார்கள். இச்சம்பவத்தில் தொடர்புடைய 10 பேர் கைதாகினர்.
ம.பி., உஜ்ஜைனியில் கூலித் தொழிலாளிகள் 14 பேர் கள்ளச்சாராயம் அருந்தியதால் பலியாகினர். மேலும் இச்சம்பவம் நடந்த பகுதியில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். அதே பகுதியைச் சேர்ந்த போலீசார் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
உஜ்ஜைனி நகரில் உள்ள கரக்குவா, ஜீவாஜிகன்ஜ், மற்றும் மஹாகல் போலீஸ் நிலைய எல்லைக்குள் நடந்துள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். ‛சாராயம் குடித்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 15 நிமிடங்களில் உயிரிழந்துள்ளனர். சாராயத்தில் வேறு சில ஆபத்தான கெமில்கல்களும் கலந்திருக்கலாம் அவை சோதனை முடிவில் தெரியும்’ என்று சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் இது குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். கள்ளச்சாராயம் போன்றவற்றை விற்பவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என உஜ்ஜைன் மாவட்ட கலெக்டர் அஜீஷ் சிங் தெரிவித்துள்ளார்.