டாக்டரை மிரட்டி பணம் பறித்த அடாவடி நிருபர்கள் கைது!

சித்த வைத்தியரை மிரட்டி பணம் பறித்த, அடாவடி நிருபர்களை, போலீசார் கைது செய்தனர்.
வேலுார் மாவட்டம், பிரம்மபுரத்தைச் சேர்ந்தவர் விஜயா, 40; சித்த வைத்தியம் பார்த்து வருகிறார். இவரிடம் சர்க்கரை நோயாளிகள், இன்சுலின் ஊசி போட்டு வருகின்றனர். இதை, ‘செய்தி அலசல்’ என்ற நாளிதழ் நிருபர்களான, விஜயகுமார், காளிமுத்து, தென்னரசு, மற்றும், ‘வரலாறு இதழ்’ நிருபர் ஆனந்தசீனிவாசன், ஆகியோர் தட்டிக் கேட்டனர்.
‘சித்த வைத்தியர் எப்படி ஊசி போடலாம்’ என, விஜயாவை மிரட்டி, 12 ஆயிரம் ரூபாய் பெற்றனர். இதை, விஜயா ரகசியமாக மொபைல் போனில் படம் எடுத்து, கலெக்டர் சண்முகசுந்தரம், எஸ்.பி., பிரவேஷ்குமார் ஆகியோருக்கு, ‘வாட்ஸ் ஆப்’பில், புகாராக அனுப்பினார். இதையடுத்து, காட்பாடி போலீசார், நான்கு பேரையும் கைது செய்தனர்.