அமைச்சர் இமார்தி தேவியை ‘ஐடம்’ என்று கூறிய கமல்நாத்!! பேச்சைக் கண்டித்து மௌன போராட்டம்..

மத்தியப் பிரதேச பெண் அமைச்சர் குறித்து மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மாநில முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌகான், பாஜக எம்.பி. ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் மௌனப் போராட்டம் நடத்தினர்.
தேர்தல் பிரசாரத்தின் போது, மத்தியப் பிரதேச மாநில பெண் அமைச்சர் இமார்தி தேவியை ‘ஐடம்’ என்று கூறிய கமல்நாத்தின் பேச்சு கடும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள், கமல்நாத்தின் பேச்சைக் கண்டித்து திங்கள்கிழமை காலை போபாலில் உள்ள மிண்டோ வளாகத்தில் இரண்டு மணி நேரம் மௌனப் போராட்டம் நடத்தினர். இதுபோலவே, பாஜகவினர் குவாலியரிலும் மௌன போராட்டத்தை நடத்தினர்.