கட்டிய சீட்டு பணம் கிடைக்காததால் பெட்ரோல் ஊற்றி பற்றவைத்த சம்பவம்.. உறைய வைக்கும் சிசிடிவி காட்சிகள்!!

பாலசுப்பிரமணியன் தீக்குளித்தபோது அருகில் இருந்த வீட்டில் பதிவான சிசிடிவி காட்சிகள் இப்போது வெளியாகி இருக்கிறது. அதில் மரியசெல்வம் வீட்டின் வாசலின் நின்று கொண்டு பணம் கேட்கும் காட்சிகள் உள்ளன. கையில் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலுடன் நிற்கும் அவர் பேசும்போது மரியசெல்வம் வெளியே வருகிறார்.

மரியசெல்வம் எதையும் கண்டுகொள்ளாமல் வீட்டிலிருந்து வெள்யே வருவதும் போவதுமாக இருக்கிறார். உடலில் பெட்ரோலை ஊற்றியபோதும், மரியசெல்வம் தன்னுடைய பைக்கை பாதுகாப்பாக எடுத்து விடுகிறாரே தவிர பாட்டிலை தட்டிவிட முயலவில்லை. அவர் உடலில் தீப்பற்றியபோது கூட காப்பாற்ற முயற்சி செய்யாமல் வேடிக்கை பார்க்கும் காட்சிகள் வெளியாகி விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த விக்கிரமசிங்கபுரம் போலீஸார், காலசுப்ப்பிரமணியன் தீக்குளிக்கக் காரணமாக இருந்த மரியசெல்வத்தை கைதுசெய்து விசாரித்து வருகிறார்கள்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x