“வக்கிரங்களை அதிமுக அரசு வேடிக்கை பார்க்கிறது” விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் குறித்து திருமுருகன் காந்தி கருத்து!!

“விஜய் சேதுபதி, தோனியின் குழந்தைகளுக்கு விடப்பட்ட வக்கிர மிரட்டல்களைப் போல என் குழந்தைக்கும் இப்படிதான் பதிவு போட்டனர்” எனத் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
“நடிகர் விஜய் சேதுபதியின் மகளை பாலியல் வன்கொடுமை செய்வேன்” என நெட்டிசன் ஒருவர் மிரட்டல் விடுத்திருந்த நிலையில், அது சமூக வலைத்தளங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
தோனி, விஜய்சேதுபதி குழந்தைகளை பற்றி வக்கிர பதிவுகள் தொடர்கின்றன. சில நாட்களுக்கு முன் என் குழந்தையை பற்றியும் இப்படியான பதிவு செய்தனர்.
சிறுமி ராஜேஸ்வரியை அழித்தவனை கைது செய் என பேசியதற்காக என் மீது பிணையில் வர இயலாத வழக்கு போட்ட அரசுதான் இந்த வக்கிரங்களையும் வேடிக்கை பார்க்கிறது— Thirumurugan Gandhi திருமுருகன் காந்தி (@thiruja) October 20, 2020
இந்நிலையில் இதுகுறித்து இன்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “தோனி, விஜய் சேதுபதி குழந்தைகளைப் பற்றி வக்கிர பதிவுகள் தொடர்கின்றன. சில நாட்களுக்கு முன் என் குழந்தையைப் பற்றியும் இப்படியான பதிவு செய்தனர். சிறுமி ராஜேஸ்வரியை அழித்தவனைக் கைது செய் எனப் பேசியதற்காக என் மீது பிணையில் வர இயலாத வழக்குப் போட்ட அரசுதான் இந்த வக்கிரங்களையும் வேடிக்கை பார்க்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.