பஞ்சாபை தொடர்ந்து விவசாயச் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது ராஜஸ்தான் அரசு!

மத்திய அரசு கொண்டு வந்த விவசாயச் சட்டங்களை எதிர்க்கும் மாநிலமாக பஞ்சாபை தொடர்ந்து ராஜஸ்தான் அரசும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மத்திய அரசின் விவசாயச்சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தான் அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும் “காங்கிரஸ் கட்சி நம் தீர்மானங்களுக்கு ஆதரவாக உறுதியுடன் துணை நிற்கிறது. விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் சட்டங்களை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறோம். மத்தியச் சட்டங்களுக்கு எதிராக மாநில திருத்தச் சட்டம் கொண்டுவரப்படும்” என்று முதல்வர் அசோக் கெலோட் தெரிவித்துள்ளார்.

குறைந்தபட்ச ஆதாரவிலையில் கட்டாயமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதற்கான விதி செய்ய வேண்டுமென்று அமைச்சர்கள் குழுவும் தெரிவித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் ஒரு சாதாரண சூழ்நிலைகளில் விவசாய விளைபொருள்களை கொள்முதல் செய்வதற்கான வரம்பு புதிய விவசாயச்சட்டத்தில் நீக்கப்படுவதால் விவசாயப் பொருள்களை கள்ளச்சந்தையில் விற்பது, பதுக்குவது போன்றவை நடக்கும். விலை அதிகரிக்கும் என்று ராஜஸ்தான் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. தனியார் கொள்முதல்களைக் கட்டுப்படுத்தும்  சட்டத்தை நீட்டித்து ராஜஸ்தான் அரசு கடந்த மாதம் உத்தரவிட்டது.

தனது ட்வீட்டர் பக்கத்தில் முதல்வர் அசோக் கெலாட், “கொரோனா வைரஸ் நிலவரம் இன்னும் சீரியஸாக இருக்கும்போது சிஏஏ அமலாக்கம் பற்றி பேசி மேலும் பதற்றத்தை அதிகரிக்கப் பார்க்கிறது பாஜக அரசு. நாடு சந்திக்கும் நெருக்கடிகளை ஒற்றுமையுடன் எதிர்கொள்ள வேண்டும். ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்கும் தீங்கு விளைவிக்கும் சக்திகளை ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்” என்று ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x