புதிய ஆதார் அட்டைகளில் தமிழ் வாசகம் இந்தியில் மாற்றப்பட்டுள்ளதற்கு திமுக எம்.பி கனிமொழி எதிர்ப்பு!
![](https://thambattam.com/storage/2020/10/ElKBRvhU8AEkyRa-780x470.jpg)
புதிய ஆதார் அட்டைகள் பெறுவோருக்கு “எனது ஆதார், எனது அடையாளம்” என்ற தமிழ் வாசகம் இந்தியில் மாற்றப்பட்டுள்ளது என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க அரசு நாடு முழுவதும் புதிய தேசிய கல்விக் கொள்கை உள்பட அரசின் அறிவிப்புகள் ஒவ்வொன்றிலும் இந்தி மொழித் திணிப்பை கையாண்டு வருகிறது. குறிப்பாக அரசு அலுவலர்கள் மத்தியில், இந்தி பேசும் மாநிலத்தவர்களே இந்தியர்கள் என்கிற தவறான பிம்பத்தை பா.ஜ.க திட்டமிட்ட உருவாகி வருகிறது. அரசு நிகழ்ச்சி மற்றும் அறிவிப்பு தொடர்பாக வெளியிடப்பட்டும் கடிதங்களை இந்தியிலேயே வெளியிட்டு மொழித் திணிப்பை தொடர்ந்து செய்துவருகிறது.
மத்திய அரசு சார்பில் மக்களுக்கு வழங்கும் ஆதார் அட்டையில் தமிழ் வாசகத்திற்கு பதிலாக இந்தி வாசகம் இடம் பெற்றுள்ளது. தொடர்ந்து தமிழ் மக்களின் உணர்வுகளை புறக்கணிக்கப்படுகிறது என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
மாநில உணர்வுகள் இப்படித்தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது.#hindiimposition #AadharCard pic.twitter.com/cJxtB4EP0l
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 25, 2020
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “அங்கீகரிக்கப்பட்ட மாநில மொழியில் எதை வேண்டுமானாலும், ஆதாருக்காக தேர்ந்தெடுக்கலாம் என்ற உறுதிமொழியோடு கட்டாயமாக்கப்பட்ட ஆதாரில் இன்று மாநில மொழிகள் நீக்கப்பட்டுள்ளன.
ஆதார் அட்டையை புதுப்பிப்போர் மற்றும் புதிய அட்டைகள் பெறுவோருக்கு வழங்கப்படும் ஆதார் அட்டையில், ‘எனது ஆதார், எனது அடையாளம்’ என்ற வாசகம் இந்தியில் மாற்றப்பட்டுள்ளது. மாநில உணர்வுகள் இப்படித்தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.