மேலும் 72 ருபாய் சரிந்தது தங்கத்தின் விலை!!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்து தொடங்கி உள்ளது. தற்போது ஆபரண தங்கத்தின் விலை 38 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை உயர தொடங்கியுள்ளது.
கடந்த மாதத்தில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 38 ஆயிரத்தைத் தாண்டியது. அதன் பிறகு தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் என இருந்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று, 22 கார்ட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 72 குறைந்து, ஒரு கிராம் ரூ.4,713 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ.37,704 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து, ஒரு கிராம் ரூ.5,090 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ.40,720 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.