ஐபில் 2020:வாழ்வா சாவா போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை விழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி…

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி 4வது இடத்துக்கு கொல்கத்தா முன்னேறியது.
துபாயில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 54-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் சுப்மன் கில், ராகுல் திரிபாதி நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அந்த அணியின் கேப்டன் மோர்கன் ஆட்டமிழக்காமல் 35 பந்தில் 68 ரன்கள் விளாச 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ராஜஸ்தான் அணி இறங்கிய ராஜஸ்தான் அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் முன்னணி ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கு 131 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே கொல்கத்தா அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்துக்கும் முன்னேறியுள்ளது.