“அனைவருக்கும் நன்றி”- கொரோனாவிலிருந்து மீண்டார் மதுரை எம்.பி வெங்கடேசன்

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசனுக்கு கடந்த அக்டோபர் 20ஆம் தேதி காய்ச்சல் கண்டறியப்பட்டு, 22ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு மதுரை தோப்பூரில் உள்ள அரசு நுரையீரல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மேலும் அவரது குடும்பத்தினர் ஆறு பேரும் தோப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டனர். இந்நிலையில் பத்து நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். மேலும் அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.