தமிழகம் உள்பட 16 மாநிலங்களுக்கு ரூ.6,000 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு

புது தில்லி:  சிறப்பு கடன் சாளரத்தின் கீழ் சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டிற்காக 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களுக்கு இரண்டாம் தவணையாக ரூ.6,000 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

மத்திய அரசின் நிதி அமைச்சகம், அதன் சிறப்பு கடன் சாளரத்தின் கீழ் சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டிற்காக 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களுக்கு ஏற்கனவே அக்டோபர் 23-ம் தேதி முதல் தவணையாக ரூ.6,000 கோடியை விடுவித்த நிலையில், இன்று இரண்டாம் தவணையாக ரூ. 6,000 கோடியை விடுவித்துள்ளது.

4.42 சதவீத சராசரி விகிதத்தில் பெறப்பட்ட இந்தத் தொகை, அதே வட்டி விகிதத்துக்கு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்படும். இது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாங்கும் கடன்களுக்கான வட்டியை விட குறைவென்பதால், இது அவர்களுக்கு பலனளிக்கும்.

இது வரை, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கான சிறப்பு சாளரத்தின் கீழ் ரூ.12,000 கோடியை கடனாக வழங்க நிதி அமைச்சகம் வழி வகுத்துள்ளது. கடன் வழங்குவதற்கான சிறப்பு சாளரத்தை 21 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்கள் தேர்வு செய்துள்ளன.

தமிழகம், ஆந்திரம், அசாம், பிகார், கோவா, குஜராத், ஹரியாணா, இமாசலப்பிரதேசம், கர்நாடகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், மேகாலயம், ஒடிசா, திரிபுரா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், தில்லி, ஜம்மு – காஷ்மீர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்த கடன்கள் வழங்கப்படுகின்றன. இரண்டாம் தவணையில் புதுச்சேரி இணைக்கப்பட்டுள்ளது.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x