மகளுக்கு சல்யூட் அடித்த தந்தை..! வியக்கவைக்கும் காட்சி

திருப்பதியில் காவல்துறை ஆய்வாளராக இருப்பவர் சியாம் சுந்தர். இவரது மகள் பிராசந்தி தற்போது குண்டூர் பகுதியில் டிஎஸ்பி ஆக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
பிரசாந்தி திருப்பதியில் நடைபெற்ற காவல்துறையினருக்கான கூட்டத்திற்கு வருகைதந்துள்ளார். அங்கு பணியின் போது ஏதேட்சையாக தந்தையை சந்திக்க நேர்ந்துள்ளது.
முதன்முதலாக தனது மகளை டிஎஸ்பி உடையில் பார்த்த தந்தை நெகிழ்ச்சியில் அவருக்கு சல்யூட் அடித்துள்ளார். அந்தக் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. இதுவே மகள் தந்தைக்கு ஆற்றும் உதவி என அனைவரும் அப்புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.