பள்ளிகள் திறப்பு குறித்து வரும் 9 ஆம் தேதி கருத்து கணிப்பு கூட்டம் நடைபெறும்!!!

பள்ளிகள் திறப்பு தொடர்பாக வரும் 9ஆம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தொற்று பரவல் ஓரளவு குறைந்துள்ளதால் கல்வி நிறுவனங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.
அதன்படி, வரும் 16ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை வீசும் என்று எழுந்த பேச்சு மற்றும் பருவமழை காரணமாக பள்ளிகளை இப்போது திறக்கக்கூடாது என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், பள்ளிகள் திறப்பு தொடர்பாக வரும் 9ஆம் தேதி கருத்து கேட்புக் கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அன்று காலை 10 மணிக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என்றும் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் அதில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
நேரில் பங்கேற்க இயலாதவர்கள் கடிதங்கள் மூலம் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.