வீட்டின் சீலிங்கை உடைத்து உள்ளே நுழைந்த மலைப் பாம்புகள்!!

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில், வீட்டு சீலிங்கை உடைத்து இரண்டு மலைப்பாம்புகள் படுத்திருந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2.8மீ மற்றும் 2.5மீ நீளமுள்ள அந்த இரண்டு பாம்புகளும் ஆண் பாம்புகள் என்றும், அவை இரண்டும் ஒரு பெண் பாம்புக்காக போட்டிப் போட்டு சண்டையிட்டதாகவும் பாம்புகளை பிடிக்கவந்த பாம்பாட்டி ஸ்டீபன் ப்ரவுன் என்பவர் கூறியுள்ளார். அந்த பெண் பாம்பை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த பெண் பாம்பு அந்தப் பகுதியிலேயே சுற்றிக்கொண்டு இருக்கலாம் என்பதால் தேடும் படலம் நடந்து விடுகிறது. பிடிக்கப்பட்ட அந்த இரண்டு ஆண் பாம்புகளையும் பாம்பாட்டி வனப் பகுதியில் விட்டுள்ளார்.
இதற்கு முன்பே தன்னுடைய குடியிருப்பு பகுதியில் பாம்புகள் வந்துள்ளன என்றும், ஆனால் இவ்வளவு பெரிய பாம்புகள் வீட்டிற்குள் வந்தது இதுதான் முதன்முறை என்றும் அந்த வீட்டின் உரிமையாளர் டைட் என்பவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, “மழைக்காலம் என்பதால், ஆஸ்திரேலியாவில் பல பாம்புகள், குடியிருப்பு பகுதியை நோக்கி வர வாய்ப்புகள் உள்ளன. இதனால், பாம்பாட்டிகளின் தேவை அதிகரிக்கும். இங்குள்ள பாம்புகள் மிகவும் விஷம் வாய்ந்தவை. பாம்பாட்டிகளின் உதவியின்றி அருகில் செல்வது ஆபத்தானது. ” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.