உத்திரபிரதேசத்தில் ஜாமீனில் வெளிவந்து, சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற கொடூரன்!!
சிறுவன் ஒருவனை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய நபர் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியில் வந்த நிலையில், சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் சண்ட்கபிர் நகரில் 7 வயது சிறுமி ஒருவர், கடந்த 4-ம் தேதி காணாமல் போனதாகப் புகார் எழுந்தது. அதை விசாரித்த காவல்துறையினர், அவரது உடலைச் சனிக்கிழமை மீட்டுள்ளனர். பிரேதப் பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தான் சிறுமியைக் கடத்தி காட்டுப் பகுதிக்குக் கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில், அவர் குறித்து மேலும், வழக்குகள் இருக்கிறதா என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில், அவர் ஏற்கனவே சிறுவன் ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி சிறைக்குச் சென்றுள்ளார். அதில், ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், இந்த 7 வயது சிறுமியைக் கடத்தி பாலில் வன்கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது.
எனவே போலீசார், அந்த நபரால் வேறு சிறுவர், சிறுமிகள் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.