“அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு” வானிலை மையம் அறிவிப்பு!!
பருவநிலை மாற்றம் மற்றும் வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை வேகமாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கபடுகிறது. மற்ற மாவட்டங்களை மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே காணப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், அடுத்த 48 மணி நேரத்தில் தென் கடலோர மாவட்டங்கள், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பரவலாக ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் தான் காணப்படும். தமிழகத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள தூத்துகுடி, சேலம், தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, விருதுநகர், நாகப்பட்டினம், கூடலூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.