பீகார் சட்டப்பேரவை தேர்தலில் முன்னிலை வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி!!

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
பீகாரில் மொத்தமுள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல், 3 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள 55 வாக்கு எண்ணும் மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பீகார் மாநிலத்தில் நான்குக்கும் அதிகமான கூட்டணி களத்தில் இருந்தாலும், நிதிஷ்குமார் தலைமையிலான பாஜக கூட்டணிக்கும், ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மெகா கூட்டணிக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி 130 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதில் பாஜக 71 இடங்களிலும், ஜேடியு 53 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. ஆர்ஜேடி கூட்டணி 101 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆர்ஜேடி 61 இடங்களிலும், காங்கிரஸ் 21 இடங்களிலும் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்ற கட்சிகள் 12 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.