50% மேல் உள்ள பெற்றோர்களின் கருத்து,”பள்ளிகளை தற்போது திறக்க வேண்டாம்” – என்பதே!!!

பள்ளிகளைத் திறப்பது குறித்து பெற்றோர்களின் கருத்துகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இதுவரை திறக்கப்படவில்லை. பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பள்ளியில் மாணவ மாணவிகள் சேர்க்கை நடத்தப்பட்டது. அந்த நேரமும் பள்ளிகள் திறக்காத நிலையில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. பத்து, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் விரும்பிய உயர்கல்வி பெறுவதற்கு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவது அவசியம். 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவ, மாணவியர்களுக்கு வருகின்ற 16 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.
இதற்கு பெரும்பாலான பெற்றோர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து கருத்து கேட்கப்பட்டது. பள்ளிகள் திறப்பது குறித்து பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 50% அதிகமான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். பள்ளி திறப்பது குறித்து பெற்றோர்களின் கருத்துகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி திறப்பது குறித்து அரசு முடிவெடுக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.