சென்னையில், மாமனார், மாமியார் மூவரையும் சுட்டுக்கொன்ற மருமகள்!! கைது செய்த போலீசார்..

சென்னை, யானைக்கவுனியில், மாமனார், மாமியார் மற்றும் கணவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மருமகள் ஜெயமாலா உள்ளிட்ட 3 பேரை மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில், போலீசார் கைது செய்தனர்.
சென்னை சவுகார்பேட்டை விநாயக மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் தலித் சந்த்(74). அவர் மனைவி புல்ஷா பாய்(70). இவர்கள் மகன் ஷீத்தல்(40), மூவரும் அடுக்குமாடி குடியிருப்பில் முதல்தளத்தில் வசித்தனர். 3 பேரும்,நேற்று முன்தினம்(நவ.,11) துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தனர். சம்பவ இடத்திற்கு, சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் ஒரு பெண் உட்பட 6 பேர் கும்பல் இந்த கொலையை செய்தது தெரியவந்தது. விசாரணையில், ஜெயமாலா சுட்டுக்கொன்றது தெரியவந்தது. ஷீத்தலிடம் விவாகரத்து பெற்று வாழ்ந்து வரும் ஜெயமாலா, ரூ.5 கோடி ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்ததும், இது தொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையே மோதல் நிலவி வந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்காக நேற்று முன்தினம் மஹாராஷ்டிராவிலிருந்து உறவினர்களுடன் ஜெயமாலா சென்னை வந்துள்ளார். அப்போது கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக துப்பாக்கியால் சுட்டு கொன்றதும் போலீசாரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, ஜெயமாலாவை பிடிக்க போலீசார், புனேவுக்கு விரைந்தனர்.இன்று ஜெயமாலா உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.