கொரோனா தடுப்பூசி குறித்து மத்திய அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை தொடுத்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி!!
கொரோனா தடுப்பூசி தொடர்பாக மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. இதனிடையே கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளும் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி, கொரோனா தடுப்பூசி மேம்பாடு, அதற்கான ஒப்புதல் மற்றும் கொள்முதல் தொடர்பான முக்கிய பிரச்னைகள் குறித்து முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
The PM must tell the nation:
1. Of all the Covid vaccine candidates, which will GOI choose & why?
2. Who will get the vaccine first & what will be the distribution strategy?
3. Will PMCares fund be used to ensure free vaccination?
4. By when will all Indians be vaccinated?— Rahul Gandhi (@RahulGandhi) November 23, 2020
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி பற்றிய திட்டங்கள் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், “1. கொரோனா தடுப்பூசிகளில் மத்திய அரசு எதனைத் தேர்வு செய்யும்? ஏன்? 2. கொரோனா தடுப்பூசியை முதலில் யார் பெறுவார்கள்? அவர்களின் விநியோக உத்தி என்னவாக இருக்கும்? 3. கொரோனா தடுப்பூசி இலவசம் என்பதை உறுதிப்படுத்த பி.எம். கேர்ஸ் நிதி பயன்படுத்தப்படுமா? 4. அனைத்து இந்தியர்களுக்கும் எப்போது தடுப்பூசி போடப்படும்? என்ற கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும்” என்று ராகுல் வலியுறுத்தியுள்ளார்.