ஹார்ட் அட்டாக் போல உணர வைக்கும் ஆங்சைட்டி அட்டாக்!! யாருக்கு, எப்பொழுது, ஏன்??
இது அனைவருக்கும் சில பொதுவான காரணங்களால் திடீரென வரக்கூடிய ஆகும். ஒருவரின் அருகில் திடீரென ஒரு பாம்பினை தூக்கிப்போட்டால் வரக்கூடிய பயத்தை இதற்கு உதாரணமாகக் கூறலாம். மேலும், பல புற காரணங்களால் இந்த வகை ஆங்சைட்டி அட்டாக் ஏற்படலாம். இது சிறிது நேரத்தில் சரியாகிவிடும்.
இது ஆழ்மனதிலிருந்து வரக்கூடிய ஒருவித தவிப்பால் ஏற்படுவது. அவமானம், குற்றவுணர்ச்சி போன்றவற்றை இதற்கு காரணமாகக் கூறலாம். இந்த உணர்வுகள் அதிகரிக்கும்போதும் ஒருவரின் மனநிலை சீரற்றதாகி ஆங்சைட்டி அட்டாக் ஏற்படும். இந்த வகை ஆங்சைட்டி அட்டாக் ஏற்பட ஒருவரின் மனநிலையே முழுக்க முழுக்க காரணம். முதல் வகையில் சொன்ன பாம்புபோன்ற புறக் காரணிகளால் இது ஏற்படுவதில்லை.
இந்த வகை ஆங்சைட்டி அட்டாக் உளவியல் மற்றும் நரம்பியலுடன் தொடர்புடையது. ஒருவர் கோபத்தால் தன்னை இழக்கும் நிலையை இதற்கு உதாரணமாகக் கூறலாம். ‘வாழ்க்கையில் தான் அனைத்தையும் இழக்கப்போகிறோம்’ என்று தோன்றும் எண்ணத்தால் ஏற்படும் பதற்றத்தையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
எப்போதும் அதிகமாக உணர்ச்சி வசப்படுவோர்க்கு ஆங்சைட்டி அட்டாக் எளிதில் ஏற்படலாம். ஏற்கெனவே உளவியல் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்னை உள்ளவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகும்போது இதனால் பாதிக்கப்படலாம். ஏதேனும் ஒரு பிரச்னை அல்லது ஆபத்து குறித்து அதிக நேரம் யோசித்துக் கொண்டிருக்கும்போது, அந்தச் சிந்தனை ஆங்சைட்டி அட்டாக்காக மாற வாய்ப்புள்ளது. பலவீனமான இதயம் உள்ளவர்களுக்கும் இது ஏற்படலாம்.