ரயில்வே ஊழியர்களுக்கு பண்டிகைக் கால போனஸ் வழங்க ஒப்புதல் வழங்கியது மத்திய அரசு!!

ரயில்வே ஊழியர்களுக்கு பண்டிகைக் கால போனஸ் வழங்கும் வகையில் ரூ.2,081.68 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தீபாவளிப் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு, ரயில்வே ஊழியர்களுக்கு பண்டிகைக் கால போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் உள்ள சுமார் 11.58 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள்கள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
11.58 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ரூ.2,081.68 கோடி ஒதுக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.