பிரேத பரிசோதனையின் போது எழுந்த நபரால் பரபரப்பு..!
![](https://thambattam.com/storage/2020/12/445408688686fadcda973d6a3a8470ca.jpg)
கென்யாவைச் சேர்ந்தவர் பீட்டர் கெஜன் (32). இவர் வீட்டில் திடீரென நிலைகுலைந்து விழுந்ததால் உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் இவர் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.
இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக இவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அங்கு பணியாளர்கள் இவரது உடலில் இருந்து ரத்தத்தை வெளியே எடுக்க ஆயத்தமாகியுள்ளனர்.
அப்போது அவர்கள் பீட்டர் உயிருடன் இருப்பதை உணர்ந்துள்ளனர். திடீரென பீட்டர் சுயநினைவுக்கு வர அங்குள்ள பணியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தான் பிணவறையில் இருப்பதைப் பார்த்ததும் பீட்டரும் பயத்தில் அலறியுள்ளார்.
இதையடுத்து மீண்டும் மருத்துவ அறைக்கு அவரை எடுத்துச் சென்று அங்கு முதலுதவி சிகிச்சைகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பீட்டரின் உறவினர்கள் மருத்துவமனை மீது புகார் தெரிவித்துள்ளனர்.