ரூ. 5 கோடி மதிப்புள்ள நகைகள்.. பத்து நிமிடங்களுக்குள் நடந்து முடிந்த கொள்ளை??

பிகாரில் ரூ. 5 கோடி மதிப்புள்ள நகைகள் பட்டப்பகலில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
பிகாரின் தர்பங்கா நகரில் சுனில் லத் என்பவருக்குச் சொந்தமான நகைக்கடை ஒன்று உள்ளது. புதன்கிழமை காலை 10.30 மணியளவில் வழக்கம் போல கடை திறக்கப்பட்டு பணியாளர்கள் வேளையில் ஈடுபட்டிருந்த சமயம், கையில் துப்பாக்கி ஏந்திய பத்து மர்ம நபர்கள் அதிரடியாக உள்ளே நுழைந்தனர்.
பணியாளர்களை சுட்டுக் கொன்று விடுவதாக மிரட்டிய அவரகள், அங்கிருந்த ரூ. 5 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் கல்லாவில் இருந்த பணத்தினை கொள்ளையடித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். மொத்த சம்பவமுமே பத்து நிமிடங்களுக்குள் நடந்து முடிந்து விட்டதாக் சுனில் போலீசில் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளார்.
சம்பவம் நடந்த இடத்தில இருந்து 200 மீட்டர் தொலைவில்தான் பாஜக எம்.எல்.ஏ சஞ்சய் சர்வாகியின் வீடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறை உயர் அதிகாரிகள் அங்கு விரைந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.