சிக்கன் ரைஸ்க்கு காசு கொடுக்க முடியாது.. மதக்கலவரம் என அட்ராசிட்டி செய்த பாஜக பிரமுகர்…!
https://www.facebook.com/100007384787541/posts/2613258362263631/
திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் பகுதியில் சிக்கன் ரைஸ் தர மறுத்ததற்காக, மதக்கலவரம் ஏற்படும், அமித் ஷா பி.ஏ.-வுக்கு போன் போடுவேன் என்று பாஜக பிரமுகர் ஒருவர் மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சம்பந்தப்பட்ட நபர், தன்னை பாஜகவின் திருவல்லிக்கேணி பகுதி செயலாளராக வீடியோவில் அறிமுகப்படுத்திக் கொள்கிறார். சிக்கன் ரைஸிற்கு காசு கேட்டால் மதக்கலவரம் வெடிக்கும் என அவர் மீண்டும் மீண்டும் குடிபோதையில் உளறியுள்ளார். அவரை போலீசார் லாவகமாக பேசி அப்புறப்படுத்தியுள்ளனர்.
இந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகிறது.