‘ராகுல் காந்தி அதுக்கு சரிப்பட மாட்டார்’ குஷ்பு சர்ச்சை கருத்து

‘காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் சரிவர மாட்டார்; சச்சின் பைலட் அல்லது ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை நியமித்திருக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறியதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
கடந்த 2019ல் நடைபெற்ற லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்தார். தற்காலிக தலைவராக சோனியா செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ‘ராகுல் மீண்டும் கட்சி தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும்’ என காங்கிரஸ் எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே, இதுகுறித்து கருத்து தெரிவித்த மும்பையை சேர்ந்த காங்கிரஸ் பேச்சாளர் சஞ்சய்ஜா என்பவர், ‘ ‘ராகுல் காந்தி பதவி கொடுத்ததற்கு பதிலாக மும்பையை சேர்ந்த காங்கிரஸ் பேச்சாளர் சச்சின் பைலட் அல்லது பா.ஜ.விற்கு கட்சி தாவிச்சென்ற ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோரில் ஒருவருக்கு தலைவர் பதவி வழங்கியிருக்கலாம்’ ’என டுவிட்டர்’ பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
இந்த கருத்துக்கு குஷ்பு ஆதரவு தெரிவித்து தன் ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் மவுலானா தன் டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரவித்துள்ளார். “தலைவர் பதவியில் நேரு குடும்ப வாரிசு தான் தொடர வேண்டும் என்பது கோடிக்கணக்கான தொண்டர்களின் விருப்பம். உட்கட்சி விவகாரத்தை சமூக வலைதளங்களில் விமர்சிக்கக் கூடாது. குஷ்புவின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று ஹசன் மவுலானா குறிப்பிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் குஷ்புக்கு எதிராக இளைஞர் காங்கிரசார் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.