தமிழகத்தின் பல போலீஸ் நிலையங்களிலும் புகார்!! உடனடியாக வருத்தம் தெரிவித்த குஷ்பு..

காங்கிரஸ் கட்சியை மூளைவளர்ச்சி இல்லாத கட்சி விமர்சித்தது விஸ்வரூபமானதால் நடிகை குஷ்பு தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் கடந்த வாரம் வரை இருந்தவர் நடிகை குஷ்பு. திடீரென காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவிவிட்டார் குஷ்பு. டெல்லியில் பாஜக பொதுச்செயலாளர் சிடி ரவி முன்னிலையில் அக்கட்சியில் குஷ்பு இணைந்தார்.
பின்னர் சென்னைக்கு வந்த குஷ்பு பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, பாஜக மூத்த தலைவர்களை அதிரவைக்கும் வகையில் நான் ஒரு பெரியாரிஸ்ட் என பிரகடனம் செய்தார்.
அப்போது காங்கிரஸ் கட்சியை மூளைவளர்ச்சி இல்லாத கட்சி என சாடினார் குஷ்பு. குஷ்புவின் இந்த விமர்சனம், மாற்றுத் திறனாளிகளை கோபம் கொள்ள வைத்தது. இதனையடுத்து நடிகை குஷ்பு மீது தமிழகத்தின் பல போலீஸ் நிலையங்களிலும் புகார் கொடுக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து குஷ்பு தாம் அப்படி பேசியதற்காக வருத்தம் தெரிவித்திருக்கிறார். மேலும் ஆழ்ந்த துயரத்தையும் வேதனையும் தருவதாகவும், அவசரத்தில் இந்த சொற்றொடர்கள் பயன்படுத்தப்பட்டுவிட்டதாகவும் குஷ்பு கூறியுள்ளார்.