பிரம்மாண்ட பதுங்கு குழிக்குள் இறங்கிய போலீசார் அதிர்ச்சி… கார்கள், குதிரைகள், கஞ்சா…

பிரிட்டனில் பிரம்மாண்ட பதுங்கு குழி ஒன்றிற்குள் இறங்கிய போலீசார் கண்ட காட்சி அவர்களை அதிர வைத்தது.
பிரிட்டனின் ஸ்கென்டுல்பை என்ற கிராமத்தில் பண்ணை வீடு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, வைக்கோல் சேமித்து வைக்கும் இடத்தில் ரகசிய வழி ஒன்று இருப்பதைக் கண்டுள்ளனர்.
அந்த திறப்பின் வழியாக இறங்கிய போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. பூமிக்கடியில் 12 கண்டெய்னர்களை இணைத்து உருவாக்கப்பட்டஒரு பிரம்மாண்ட பதுங்கு குழி உருவாக்கப்பட்டிருந்தது.

அந்த பதுங்கு குழிக்குள், மூட்டை மூட்டையாக ஏராளமான கஞ்சாவும், 22 குதிரைகளும், இலாமா என்னும் விலங்கும், ஆறு திருடப்பட்ட கார்களும், பயங்கர ஆயுதங்களும் மறைத்து வைக்கப்படிருந்தன. அந்த அளவுக்கு அந்த பதுங்கு குழி பிரமாண்டமாக இருந்தது.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு மட்டும் இந்தியா ரூபாயில் ஐந்தரை கோடி ஆகும். இந்த சம்பவம் தொடர்பாக 34, 35 மற்றும் 28 வயதுடைய மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


