சிறுமியை சீரழித்த அப்பனும், தாத்தாவும்… தஞ்சை அருகே பயங்கரம்

தந்தையும், தாத்தாவும் சேர்ந்து சிறுமியை கர்ப்பமாக்கிய நிலையில், இருவர் மீதும் போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டைச் சேர்ந்தவன் இளங்கோவன்.. இவனது மனைவி 5 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இவனுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகள், சித்தி வீட்டில் வளர்ந்து வந்துள்ளனர். 15 வயது ஆன மூத்த மகள், தந்தை இளங்கோவனுடன் வளர்ந்துள்ளார். தன் மகள் என்றும் பார்க்காமல், காமவெறி மிருகமான இளங்கோவன், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.

இதையறிந்த அக்கம் பக்கத்தினர், சிறுமியை அழைத்து கொண்டு போய், தாத்தா மாரிமுத்து வீட்டில் பத்திரமாக கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துள்ளனர். ஆனால், அந்த சிறுமிக்கு நடந்தது அதைவிட விபரீதம். 9-ஆம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமிக்கு திடீரென வயிற்றுவலி வந்துவிட்டது. இதனால் மருத்துவமனைக்கு அழைத்து கொண்டு டெஸ்ட் செய்து பார்த்ததில், 5 மாதம் கர்ப்பம் என்று தெரியவந்தது.

இதை கேட்டு ஆவேசமடைந்த மக்கள், சைல்டு லைன் அமைப்பினர் மூலம் வல்லம் அனைத்து போலீசுக்கு புகார் தந்தனர். அவர்கள் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில், தாத்தா மாரிமுத்துவும், அப்பா இளங்கோவனும் செய்த கொடுமைதான் தன் கர்ப்பத்துக்கு காரணம் என்று சொல்லியுள்ளாள்.

இதையடுத்து, அந்த காமகயவர்கள் இளங்கோவன் மற்றும் கிழவன் மாரிமுத்துவை போலீசார் தூக்கி உள்ளே வைத்துள்ளனர். 2 பேர் மீதும் கடுமையான போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x