படுகொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் வரும் 9-ம் தேதி சலூன் கடைகள் அடைத்து போராட்டம்!!

12 வயது சிறுமியின் கொலைக்கு நீதி கேட்டுத் தமிழகம் முழுவதும் வரும் 9-ம் தேதி வெள்ளிக்கிழமை முடிதிருத்தும் நிலையங்கள் அனைத்தும் ஒருநாள் போராட்டமாக மூடப்படுகின்றன.

இதுபற்றி சோழமண்டல முடிதிருத்துவோர் நலச் சங்கத் தலைவர் பெல் மாறன், அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். “திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வடம் குரும்பட்டியில் கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி செவ்வாய்க்கிழமை, முடிதிருத்தும் கடை நடத்தும் வெங்கடாசலம், லட்சுமி தம்பதியரின் மகள் கலைவாணி (வயது 12) என்கிற சிறுமியைப் பெற்றோர் வெளியே சென்றிருந்தபோது, எதிர் வீட்டில் வசிக்கும் கிருபானந்தன் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மயக்கமடைந்த சிறுமியை மின்சார வயரை மூக்கிலும், வாயிலும் செலுத்தி மின்சாரம் பாய்ச்சி படுகொலை செய்துள்ளார்.

இதைக் கொலையாளியே காவல்துறையில் ஒப்புக்கொண்டுள்ளான். வடமதுரை காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து கிருபானந்தனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த செப். 29, 2020-ல் வெளிவந்தது, சாட்சிகள் கலைக்கப்பட்டு கிருபானந்தன் குற்றவாளி என்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்டான்.

சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிடாமல் கொலையாளிக்குத் தூக்குத் தண்டனையோ, ஆயுள் தண்டனையோ கிடைக்கின்ற வகையில் தண்டிக்கப்பட வேண்டும். சிறுமியின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள சலூன் கடைகள் (முடிதிருத்தும் நிலையங்கள்) வரும் அக். 9-ம் தேதி கடையடைப்பு செய்யப்பட உள்ளது. எங்கள் குழந்தைக்கு நீதி கேட்பதற்காக இந்தக் கடையடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது” என்று அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x