அநியாத்திற்கு உயர்ந்த தங்கம் விலை..!
இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. தற்போது 39 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத்தங்கம் இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.28 அதிகரித்து ரூ.4885க்கு விற்பனையாகிறது. சவரன் ரூ.224 உயர்ந்து ரூ.39,080க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்து ரூ.75.10க்கு விற்பனையாகிறது. இந்த கடும் விலை உயர்வு காரணமாக மக்கள் மத்தியில் அதிருப்தி உருவாகியுள்ளது.