சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சரிவு..

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. பவுனுக்கு ரூ.432 குறைந்து, ரூ.37,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை குறைந்தாலும் கடந்த வாரம் முதல் தங்கத்தின் விலை உயா்ந்து வந்தது. கடந்த திங்கள்கிழமை அன்று ரூ.38 ஆயிரத்தையும், கடந்த புதன்கிழமை அன்று ரூ.39 ஆயிரத்தையும் தாண்டிய நிலையில், கடந்த வியாழக்கிழமை முதல் தங்கம் விலை குறைந்து வருகிறது.
இதன் தொடா்ச்சியாக, மூன்றாவது நாளாக சனிக்கிழமையும் ஆபரணத்தங்கத்தின் விலை குறைந்து, ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. பவுனுக்கு ரூ.432 குறைந்து, ரூ.37,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.54 குறைந்து, ரூ.4,700 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.4.10 குறைந்து, ரூ.69 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.4,100 குறைந்து ரூ.69,000 ஆகவும் இருந்தது.