“பா.ஜனதா இன்று வரை வெறும் வாய்ச்சவாடல் மட்டும் தான்” – எம்.பி. சுகேந்து சேகர்

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் தோல்வியுற்றது போல், மேங்கு வங்காளத்திலும் ஏற்படும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள மாநிலத்தில் ஆட்சிளை பிடித்தால், அம்மாநிலத்தை தங்கமாக (Golden Bengal) மாற்றுவோம் என்று பா.ஜனதா கூறி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுகேந்து சேகர் ராய் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், சுகேந்து சேகர் ராய் கூறுகையில் ‘‘பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் தோல்வியடைந்து, எந்த முடிவையும் கொடுக்காத போல் கங்கை நதியில் மேற்கு வங்காளம் மூழ்கும். பணஇழப்பு நடவடிக்கையின்போது கருப்பு பணத்தை கொண்டு வந்து ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் கொடுக்கப்படும் என்றார் பிரதமர் மோடி. அவர்களுடைய வாக்குறுதி என்ன ஆனது?.
ஜிடிபி வளர்ச்சி வீழ்ச்சியடைந்தது. வேலைவாய்ப்பு இன்மை அதிகரித்தது. பணத்தை மாற்ற வரிசையில் நின்றவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆனால் அமித் ஷா இன்னும் 15 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என வாய்ச்சவாடல் விட்டு வருகிறார். இதேபோன்று அனைத்து வாக்குறுதிகளும் வாய்ச்சவாடல்தான்.
பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் சட்ட-ஒழுங்கு பிரச்சனை பயங்கரமாக உள்ளது. ஹத்ராஸ், பலரம்பூர் ஆகிய சமீப நிகழ்வு எடுத்துக்காட்டு’’ என்றார்.