இதெல்லவோ நாடு…! குழந்தை பெற்றால் ‘போனஸ்’ வழங்குகிறது சிங்கப்பூர் அரசு!!

சிங்கப்பூரியில் குழந்தை பெறுபவர்களுக்கு போனஸ் வழங்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போதைய சூழலில், வேலையிழப்பு போன்ற பொருளாதார நெருக்கடியால் பெற்றோர் குழந்தை பெறுவதை தள்ளிப்போட நினைக்கின்றனர். பல ஆசிய நாடுகளில் இதுபோன்ற தொற்று பாதிப்பு, கருவுறுதலை வீழ்ச்சியடைய செய்துள்ளது.
இதில், சிங்கப்பூர் நாடு குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்து வருகிறது. இந்நிலையில், வேலையிழப்பு போன்ற காரணங்களால் குழந்தை பெற்றுக்கொள்வதை பலரும் தள்ளிப் போடுகின்றனர். எனவே சிங்கப்பூரியில் குழந்தை பெறுபவர்களுக்கு போனஸ் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து சிங்கப்பூரின் துணைப் பிரதமர் ஹெங் ஸ்வீ கீட் கூறுகையில், “கொரோனா நெருக்கடியால் குழந்தை பெற்றெடுப்பதை பெற்றோர்கள் தவிர்க்கின்றனர். எனவே போனஸ் வழங்கப்படும். ஆனால், எவ்வளவு தொகை வழங்கப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.” என்றார்.
அந்நாட்டில் 2018-ம் ஆண்டில் பிறப்பு விகிதம் குறைந்த அளவை எட்டியது. ஒரு பெண்ணிற்கு 1:14 என்ற விகித்தில் இருந்தது. ஆனால், சிங்கப்பூரின் அண்டை நாடான பிலிப்பையின்ஸ் அதிக கருவுறுதல் பிரச்சனையை எதிர் கொண்டு வருகிறது. அத்துடன் அந்நாட்டில் அதிக கொரோனா தொற்று பதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.