விநோதமாக நடக்கும் வங்கிக் கொள்ளை.. அமைச்சகம் எச்சரிக்கை…!

சமிபகாலமாக ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகிறது. புதுப்புது முறைகளை வங்கிக்கணக்குகளில் இருந்து பணங்களை மோசடிக் கும்பல் திருடி வருகின்றனர்.
இதனைத் தடுக்க காவல்துறை மற்றும் அரசு தரப்பிலும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் உள்துறை அமைச்சகம் தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. இதில் தற்போது புதுவிதமாக ஆன்லைன் மோசடி நடப்பதாகவும். பொதுமக்கள் அதிலிருந்து கவனமாக இருக்கவேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்தப் பதிவில் தற்போது உங்களது வங்கிக்கணக்கில் இவரை நாமினியாக சேர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது வங்கிக்கணக்கு உங்களால் பணம் அனுப்பமுடியும். இந்த செயலை நீங்கள் செய்யவில்லை என்றால் இந்த லிங்கை கிளிக் செய்து புகார் செய்யலாம் என்பது போன்ற குறுஞ்செய்தி வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படுகிறது.
இதில் இந்த லிங்கை கிளிக் செய்யும் போது உங்களின் வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்களை திருடி விடுகின்றனர். இதுபோன்ற குறுஞ்செய்தி உங்களுக்கு வரும்பட்சத்தில் உடனடியாக சைபர் க்ரைம் போலீசை அனுகுங்கள், எக்காரணம் கொண்டும் அந்த லிங்கை கிளிக் செய்துவிடாதீர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.