தமிழக மக்களின் உரிமைகளை விற்பனை செய்யும் மோடி..?

தமிழக மக்களின் உரிமைகளை மோடி விற்பனை செய்கிறார் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ராகுல் காந்தி தமிழ்நாட்டில் 3 நாட்கள், கோவையில் துவங்கி, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கிறார். ராகுலின் தமிழ் வணக்கம் என்ற பெயரில் நடைபெறவுள்ள இந்த 3 நாட்கள் சுற்றுப்பயணத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. கோவை வந்த ராகுல் காந்திக்கு சிட்ரா-காளப்பட்டி சந்திப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு பேசிய அவர் தமிழகத்திற்கு வருவது எப்போதும் மகிழ்ச்சி என்றும், பிரதமர் மோடி தமிழ்மொழி, கலாச்சாரம் போன்றவற்றை இரண்டாவதாக கருதுவதாக கூறியவர், இந்தியாவில் பல்வேறு விதமான கலாச்சாரம், வாழ்க்கை முறை இருப்பதை நாங்கள் நம்புவதாகவும், பல்வேறு மொழிகளுக்கு சமமான உரிமை இருப்பதாக உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மோடி நான்கு தொழிலதிபர் நண்பர்களுக்காக செயல்படுவதாகவும், மீடியாவை மோடி வளைத்து வைத்து இருப்பதாக குற்றச்சாட்டியவர், தமிழக மக்களின் உரிமைகளை மோடி விற்பனை செய்வதாகவும், விவசாயிகளின் உரிமைகள் வேளாண் சட்டம் மூலம் பறிக்கப்படுவதால் தான் அவர்களை எதிர்ப்பதாக தெரிவித்தவர், தமிழகம் எந்த ஒரு விசயத்திலும் முன்னுதாரணமாக இருப்பதுடன், கடந்த காலங்களில் தமிழகத்தில் தொழிற்துறை சிறந்து விளங்கிய போதிலும், தொழிற்துறையினர் தன்னிடம் ஜி.எஸ்.டி , பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மிகுந்த பாதிப்படைந்துள்ளதாக மக்கள் புதிய வாழ்க்கை முறையும், அரசையும் விரும்புவதாக தெரிவித்தார்.

தமிழ்நாடு இந்தியாவில் ஒரு பகுதியில் இருப்பதாக மோடி சொன்னார் என்றும், ஆனால் தமிழகத்தில்தான் இந்தியா இருப்பதாகவும், எனக்கு தமிழ் மக்களுடன் குடும்ப ரீதியான, ரத்த சம்மத்தப்பட்ட உறவு உள்ளதால், உங்களுக்கு உண்மையாக இருப்பதாகவே வந்திருப்பதாகவும், என் பாட்டி, தந்தை , மற்றும் தன் மீதும் அதிக அன்பை தமிழர்கள் வைத்திருப்பதாக தெரிவித்தார் ராகுல் காந்தி.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x