மே 2 முதல் 17 வரை தேர்வு… கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
உதவிப் பேராசிரியராக பணியாற்றுவதற்கான தகுதி தேர்வு (யுஜிசி நெட் தேர்வு 2021) மே 2 முதல் 17 வரை நடைபெறுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் இதை உறுதி செய்துள்ளார்.
கல்லூரி உதவி பேராசிரியர் மற்றும் ஜுனியர் ரிசர்ச் பெல்லோஷிப் தகுதிக்கான யுஜிசி – நெட் தேர்வு வரும் மே மாதத்தில் 11 நாட்கள் நடத்தப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டின் மே மாதத்தில் 2, 3, 4, 5, 6, 7, 10, 11, 12, 14 & 17 ஆகிய தேதிகளில் நெட் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வு எழுத விருப்பமுள்ளவர்கள் https:/ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் இன்று முதல் மார்ச் 3ஆம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
கம்யூட்டர் மூலமாக இந்த தேர்வு நடக்கிறது. இரண்டு தாள்களாக தேர்வு நடத்தப்படும். முதல் தாளுக்கு 100 மதிப்பெண்களும், இரண்டாம் தாளுக்கு 200 மதிப்பெண்களும் கொண்டது. வழக்கமாக நெட் தேர்வு ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும். கொரோனவினால் அந்த சூழல் மாறியுள்ளது. இன்று முதல் மார்ச் 2 ஆம் தேதி வரை இந்த தேர்வை எழுத தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான கட்டணத்தை மார்ச் 3 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.