வணிகம்

வீட்டு உபயோக சிலிண்டர் விலை இன்று திடீரென 25 ரூபாய் உயர்வு

வீட்டு உபயோக சிலிண்டர் விலை இன்று திடீரென 25 ரூபாய் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 
தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் சமைப்பதற்கு சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனா சிலிண்டரின் விலை கடந்த சில நாட்களாகவே நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருவதால் பொதுமக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை பிப்ரவரி 1ஆம் தேதி உயர்த்தப்படாத நிலையில், தற்போதைய திடீரென 25 ரூபாய் உயர்த்தி எண்ணை நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

இந்த செய்தி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.735 ஆகவும், சேலத்தில் ரூ.753 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும் வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை பிப்ரவரி 1ஆம் தேதி 191 உயர்த்தப்பட்டு, சென்னையில் ரூ.1, 649 ஆக நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x