முஜிபுர் ரஹ்மான் படுகொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு!

முஜிபுர் ரஹ்மான் படுகொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு!
வங்கதேசத்தின் தேச தந்தை என அழைக்கப்பட்ட முஜிபுர் ரஹ்மான் படுகொலை வழக்கில் கைதான மாஜி ராணுவ அதிகாரி அப்துல் மஜீத்துக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. வங்கதேசத்தின் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையும், அந்நாட்டின் முதல் அதிபருமான ஷேக் முஜிபுர் ரஹ்மான் கடந்த 1975ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இதில் குற்றவாளியான முன்னாள் ராணுவ அதிகாரி அப்துல் மஜித், இந்தியாவில் தலைமறைவாக இருந்து வந்தார்.
இதற்கிடையே வங்கதேசம் திரும்பிய அவரை டாக்கா போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அவருக்கு ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால், அவருக்கு எப்போதும் தண்டனை நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை, ஏப்.,11) நள்ளிரவில் அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.