“ஹரியானாவில் பா.ஜ அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்” – பூபிந்தர் ஹூடா

ஹரியானாவில் நடைபெற்று வரும் பா.ஜனதா அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என காங்கிரஸ் தலைவர் பூபிந்தர் ஹூடா தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவர் பூபிந்தர் ஹூடா கூறுகையில் ‘‘நாங்கள் ஹரியானா அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம். இந்த அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. அதேபோல் எம்எல்ஏ-க்களின் நம்பிக்கையையும் இழந்து விட்டது.

இரண்டு சுயேட்சை எம்எல்ஏ-க்கள் அரசுக்கு கொடுத்த ஆதரவை திரும்பப்பெற ஆதரவு தெரிவித்துள்ளனர். கூட்டணி கட்சியின் சில எம்.எல்.ஏ.-க்கள் இது மிகவும் மோசமான ஊழல் கட்சி எனக் கூறிவருகிறார்கள்’’ என்றார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x