கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்த பாதிரியாரின் சடலத்தை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு!!

ஆரணி அருகே கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்த பாதிரியாரின் சடலத்தை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அரியப்பாடி ஊராட்சி, காமராஜ் நகரை சேர்ந்தவர் ஜான் ரவி (52), கிறிஸ்தவ பாதிரியார். கொரோனா நோய்த்தொற்று காரணமாக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜான் ரவி, நேற்று காலை உயிரிழந்தார். இதையடுத்து, சடலத்தை அடக்கம் செய்வதற்காக அவரது உறவினர்கள் ஆரணி அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு கொண்டு வந்தனர்.

தகவலறிந்த குன்னத்தூர் கிராம மக்கள், கொரோனாவால் இறந்தவரின் உடலை அரியப்பாடி சுடுகாட்டில் அடக்கம் செய்யாமல், எங்களது கிராமத்திற்கு ஏன் கொண்டு வந்தீர்கள், இதனால் எங்களது கிராமத்தில் நோய்த்தொற்று உண்டாகும் என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

தகவலறிந்த ஆரணி டவுன் போலீசார், இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அரியப்பாடி கிராம மக்கள் பாதிரியாரின் சடலத்தை அடக்கம் செய்ய தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, கிராம மக்களை அதிகாரிகள் சமாதானம் செய்து பாதிரியாரின் சடலத்தை  குன்னத்தூர் சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x